விரைவில் நடிகர் அஸ்வினுக்கு திருமணம்.. பொண்ணு யாருன்னு தெரியுமா ?

aswin kumar
நடிகர் அஸ்வினுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திரைத்துறையில் நுழைய வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்த அஸ்வின் குறும்படங்கள், மாடலிங் மூலம் தனது கனவை நினைவாக்க போராடிக் கொண்டிருந்தார். அந்த கடின முயற்சிக்குக் கிடைத்த வாய்ப்பு தான் குக் வித் கோமாளி. இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட அஸ்வின் ஏராளாமான ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தார். குறிப்பாக அஸ்வினுக்கு பெண் ரசிகைகள் அதிகம். 

aswin kumar

தற்போது அஸ்வின் தமிழக மக்களிடையே நன்கு பிரபலம் ஆகிவிட்டார். இதன் மூலம் அஸ்வினின் நடிகர் கனவு நிறைவேறியுள்ளது. அந்த வகையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், அடுத்து பிரபு சாலமனின் ‘செம்பி’ படத்தில் நடித்தார்.  தற்போது புதிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஸ்வினுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வின் திருமணம் செய்யவுள்ள பெண், சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் நடிகை இல்லையாம். அஸ்வினை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் மகள் என கூறப்படுகிறது. இது காதல் திருமணமா அல்லது பெற்றோர் விருப்பப்படி நடக்கும் திருமணமா என்ற தகவல் வெளியாகவில்லை. 

Share this story