'இதயம் முரளி' படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அதர்வா...!

நடிகர் அதர்வா, தனது பிறந்தநாளை 'இதயம் முரளி' படக்குழுவினர் உடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் STR 49 ஆகிய பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்து வரும் நிறுவனம் டான் பிக்சர்ஸ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதயம் முரளி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர், நட்டி நட்ராஜ், ரக்ஷன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் அதர்வா தனது பிறந்தநாளை 'இதயம் முரளி' படக்குழுவினர் உடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
An actor who became an emotion❤️
— DawnPictures (@DawnPicturesOff) May 10, 2025
A creator who became a legacy💯
Celebrating 23 Years of @dhanushkraja #23YrsofRealmRulerDHANUSH pic.twitter.com/idQvrGvmX3