நடிகர் அதர்வாவின் பிறந்தநாள்.. டிஎன்ஏ பட சிறப்பு போஸ்டர் வெளியீடு..!
1746612550229

நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு டிஎன்ஏ படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன் படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார். கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. சில மாதங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் இப்படம் ஜூன் வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவித்துள்ளது.