தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்யும் நடிகர் பாலா

தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்யும் நடிகர் பாலா 

மக்களின் இயல்பு வாழ்கையை சூரையாடிய மிக்ஜாம் புயலால் தலைநகரான சென்னை மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தண்ணீர், உணவு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள், மூத்த குடிமக்களை வைத்திருந்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். அரசும், தனியார் தொண்டு நிறுவங்களும் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து சில பிரபலங்களும் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். இதனிடையே, சின்னத்திரையில் பிரபல  காமெடி நடிகராக அறியப்படுபவர் கேபிஓய் பாலா. இவரது உதவும் குணம் குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். அதே போன்றதொரு செயலைதான் தற்போது இவர் செய்துள்ளார்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3 லட்சம் ரூபாய் செலவில் நிவாரணப் பொருட்களை நடிகர் பாலா வழங்கியுள்ளார். அரிசி, பருப்பு, உடை உள்ளிட்ட பொருட்களை 200 குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார். 
 

Share this story