நடிகரும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா மருத்துவமனையில் அனுமதி

bala

நடிகரும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான பாலா தமிழில் அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதேபோல் 2006ம் ஆண்டு கலாபம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கால் பதித்தார். நடிகர் பாலா தமிழில் அன்பு, வீரம், காதல் கிசுகிசு போன்ற படங்களில் நடித்துள்ளவர். குறிப்பாக வீரம் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடத்து பலரது கவனத்தையும் பெற்றார். இவர் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாடகி அம்ருதாவை 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2019ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து 2021ம் ஆண்டு டாக்டர் எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

bala

இந்நிலையில், நடிகர் பாலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கேரள மாநிலம் கொச்சினில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் பாலா இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது. 

Share this story