“50 ஹீரோயின்கள் என்னை Reject செய்தார்கள்”- நடிகர் பாலா
நான் ஹீரோ என சொன்னதும் 50 ஹீரோயின்கள் என்னை நிராகரித்துள்ளனர் என நடிகர் KPY பாலா கூறியுள்ளார்.
நடிகர் KPY பாலா ஹீரோவாக நடிக்கும் ‘காந்தி கண்ணாடி’ படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் பாலாஜி சக்திவேல், நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து பேசிய நடிகர் KPY பாலா, “வேடிக்கை பார்த்தவனுக்கு World Cup கொடுத்தது போலதான் இந்த படம் எனக்கு; அதுக்கு இடையிலதான் லாரன்ஸ் அண்ணன் என்னை வைத்து படம் தயாரிப்பதா சொன்னார். நான் ஹீரோ என சொன்னதும் 50 ஹீரோயின்கள் என்னை நிராகரித்துள்ளனர். 51வது ஆளாக என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்ட ஹீரோயின் நமிதா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி. என்ன வச்சு படம் பண்ணாதீங்கன்னு நெறைய பேர் சொன்னாங்க.
படம் மூலமாகவோ, சமூக வலைதளங்களில் மக்கள் என் வீடியோவை பார்க்கிறது மூலமாகவோ எனக்கு பணம் வருகிறது. அதை வைத்துதான் நான் மக்களுக்கு உதவி செய்கிறேன். இது பெரிய விஷயமே கிடையாது. நான் சம்பாதிக்கும் பணத்தில் மக்களுக்கு உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும். அதுதான் என்னோட நோக்கம். நான் இவ்வளவு உதவி பண்றேனா அது மக்கள் எனக்குப்போட்ட பிச்சை” என்றார்.

