தூத்துக்குடி மாவட்ட சப் கலெக்டர் ஆன பிரபல நடிகரின் மகன்!
நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக வலம் வந்தவர் சின்னி ஜெயந்த். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் கடந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை புரிந்தார். அந்த சிவில் சர்விஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தை பிடித்தார். அந்தத் தேர்வில் மொத்தம் 829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்படத்தக்கது. அதையடுத்து ஸ்ருதன் செய்திகளில் வலம் வந்தார்.

இந்நிலையில் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் கல்வி மூலமா வெற்றியடைஞ்சிருக்குறது ஒட்டுமொத்த திரையுலகத்துக்கே பெருமையா இருக்கும் என்று முன்னர் ரஜினி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

