ட்விட்டர் ஓனரையே கதறவிட்ட பிரபல நடிகர்... கேட்டாரு பாரு அந்த கேள்வியை ?

cibi sathiyaraj

ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்கை பிரபல தமிழ் நடிகர் ஒருவர் வம்புழுத்த சம்பவம் வைரலாகி வருகிறது. 

உலகில் மிகப்பெரிய சமூக ஊடகமாக இருப்பது ட்விட்டர். இதை உலகில் உள்ள கோடிக்கணக்காக மக்கள் பயன்படுத்தி வருகிறது. இதுதவிர உலக தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

elon musk

இதற்கிடையே சமீபத்தில் ட்விட்டரை உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் வாங்கினார். இதையடுத்து ட்விட்டர் இணையத்தில் சில மாற்றங்களை கொண்டு வர முயற்சித்து வருகிறார். அந்த வகையில் ட்விட்டரை பயன்படுத்தும் முக்கிய நபர்களுக்கு மட்டும் ப்ளூ டிக் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 

elon musk

ஆனால் இனி இந்த ப்ளூ டிக் ஆப்ஷன் இலவசமாக வழங்கப்படாது என்றும், அதற்கு கட்டணமாக மாதம் $8 (660) செலுத்தவேண்டும் என்று எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்விட்டுக்கு பிரபல நடிகர் சிபி சத்யராஜ், கிண்டலாக ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் உங்களுடைய கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள் என்று ஜாலியாக சிபி சத்யராஜ் பதிவிட்டுள்ளார். சிபியின் இந்த ஜாலியான பதிவு இணையத்தை கலக்கி வருகிறது. 


 

Share this story