குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவு... திரைப்பிரபலங்கள் இரங்கல்

delhi ganesh

நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த டெல்லி கணேஷ் நேற்று இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவரது மறைவை தொடர்ந்து இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டெல்லி கணேஷ் உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரில் வந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் லிங்குசாமி மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு 'ஆனந்தம்' படத்தின் போது டெல்லி கணேஷ் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். டெல்லி கணேஷ் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்று இயக்குநர் ரமணா தெரிவித்தார். டெல்லி கணேஷ் இழப்பு குறித்த செய்தி அதிகாலையில் பேரிடியாய் வந்தது. மகனை பெரிய ஹீரோவாக பார்க்க ஆசைபட்டார் என்று பிரமிட் நடராஜன் கூறினார்.

ganesh

தன்னோட கடைசி நாள் வரை நடிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தாரு.. என டெல்லி கணேஷ் குறித்து நடிகர் சுவாமிநாதன் கூறினார். அவர் இருக்குற இடம் எப்பவுமே கலகலப்பா இருக்கும். இன்னைக்கிதான் அமைதியா இருக்கு என்று நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.மேலும் மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, சந்தான பாரதி மற்றும் ராதா ரவி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இதனிடையே, டெல்லி கணேஷ் மறைவுக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Share this story