'வாரிசு' தயாரிப்பாளருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ்... யார் இயக்குனர் தெரியுமா ?

dhanush

'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாத தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ்,  தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் முதல் முறையாக தெலுங்கில் அறிமுகமாக உள்ள திரைப்படம் 'வாத்தி'. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. 

 dhanush

இந்த படத்தை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து மீண்டும் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். 

dhanush

இந்நிலையில் மூன்றாவது முறையாக தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை கிஷோர் ரெட்டி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சொந்த ஊரு, டேக் ஓவர், ஸ்ரீகாரம் ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தை வாரிசு படத்தின் இயக்குனர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தெலுங்கு இயக்குனர்களுடன் கூட்டணி அமைப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story