மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி.. தனுஷின் அடுத்த படத்தின் அப்டேட்

dhanush

தனுஷ் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.  

தனுஷ் நடிப்பில் சமீபகாலமாக வெளியான ‘நானே வருவேன்’ உள்ளிட்ட சில படங்களை தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பிறகு ‘வாத்தி’ படத்தில் தனுஷ் நடித்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை ‘தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கினார். 

dhanush

‘வாத்தி’ படத்தின் மூலம் முதல்முறையாக தெலுங்கில் நடிகர் தனுஷ் கால்தடம் பதித்துள்ளார். முதல் தெலுங்கு படமே மாபெரும் வெற்றிப்பெற்ற நிலையில் இரண்டாவதாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இயக்குனர் சேகர் கம்முலா, ஹேப்பி டேஸ், லீடர், பிடா, லவ் ஸ்டோரி போன்ற சூப்பர் ஹிட் படங்களை தெலுங்கில் கொடுத்துள்ளார். தற்போது தனுஷுடன் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நடிகர் தனுஷ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story