40 வயதில் ‘யூத் ஐகான்’ – சாதிக்க இன்னும் நிறைய இருப்பதாக ‘நடிகர் தனுஷ்’ பேச்சு.

photo

நீயெல்லாம் ஹீரோவா…… என தன்னை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு இரண்டு முறை தேசிய விருதை வாங்கி   தக்க பதிலடி கொடுத்தவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ், தெலுங்கு படங்களை கடந்து ஆங்கில மொழி படத்திலும் நடித்து கோலிவிட்டிற்கு பெருமை சேர்த்தார். இந்த நிலையில் அவர் தனது 40 வயதில்  ‘யூத் ஐகான்’ விருதை பெற்றுள்ளார்.

photo

நடிகர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். செல்வராகவனின் ‘காதல்கொண்டேன்’ படத்தின் மூலமாக  பிரபலமான தனுஷ். தொடர்ந்து திருடாதிருடி, தேவதையை கண்டேன் புதுப்பேட்டை, சுள்ளான், பொல்லதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, அசுரன், கர்ணன் என தனது வெற்றிபடிகட்டுகளை அடுக்கிங்கொண்டே சென்றார்.

photo

செல்வராகவன்-தனுஷ் காம்போ எப்படி ஹிட் காம்போவோ அதேப்போல வெற்றிமாறன்- தனுஷ் கூட்டணியிம் மாஸ் கூட்டணியாக வலம் வருகின்றனர். இந்த லிஸ்டில் அடுத்து தனுஷ்- மாரிசெல்வராஜ் இணைவார்கள் என ரசிகர்கள் கூறிவருகிறனர். இப்படி வெற்றி நாயகனாக வலம்வரும் தனுஷுக்கு தக்ஷின் உச்சி மாநாட்டில்' யூத் ஐகான் விருது' வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ‘அனுராக் தாகூர்’ கரங்களில் இருந்து பெற்றுக்கொண்டார் தனுஷ்.  இதனை  தொடர்ந்து பேசிய தனுஷ்” நான் 40 ஆவது வயதில் யூத் ஐகான் விருதை வாங்கியுள்ளேன். நான் வெல்லவும், சாதிக்கவும் நிறைய இருக்கிறது. எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அதற்காக தான் நான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இன்னும் கூட கனவு காண்கிறேன்என பேசியுள்ளார்.



 

Share this story