தனுஷ் பிறந்தநாளில் குவியும் அப்டேட்டுகள்.. என்னென்ன தெரியுமா ?
தனுஷ் பிறந்தநாளில் புதிய அப்டேட்டுகள் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தென்னிந்தியாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். அவரது நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் D50 ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்‘ உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். மூன்று பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தையடுத்து தனது 50வது படத்தை தனுஷே இயக்கி நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை வரும் ஜூலை 28-ஆம் தேதி கொண்டாடவுள்ளார். இதையொட்டி அவர் நடிக்கும் இரண்டு படங்களின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாம். அதில் ‘கேப்டன் மில்லர்’ படத்திலிருந்து டீசம், ‘D50’ படத்திலிருந்து டைட்டில் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளதாம். இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.