போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தனுஷ்... பெற்றோருடன் சிவராத்திரி பூஜை செய்த புகைப்படங்கள் வெளியீடு !

dhanush

தனது பெற்றோருடன் போயஸ் கார்டன் வீட்டில் நடிகர் தனுஷ் சிவராத்திரி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். தற்போது அவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். 

dhanush

இதற்கிடையே கடந்த 2004-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து நடிகர் தனுஷ் திருமணம் செய்துக்கொண்டார். 18 ஆண்டுகளாக நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வந்த இவர்கள், கடந்த ஆண்டு பரஸ்பரமாக பிரிவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா மற்றும் லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர். 

dhanush

இவர்கள் இருவரும் பிரிவதற்கு முன்னர் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வந்தனர். சுமார் 150 கோடியில் அரண்மனை போன்று பிரம்மாண்டமாக இந்த வீடு உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வீட்டில் தனது பெற்றோருடன் நடிகர் தனுஷ் குடியேறியுள்ளார். நேற்று சிவராத்திரியையொட்டி பெற்றோருடன் பூஜையிலும் நடிகர் தனுஷ் கலந்துக்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

 

Share this story