“வானுக்கும் எல்லை உண்டு நட்புகில்லையே!”- நடிகர் தனுஷின் ரீயூனியன் கிளிக் வைரல்.

photo

வாழ்வில் நாம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் பள்ளி, கல்லூரி காலங்களை நம்மால் மறக்க முடியாது. அந்த வகையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான தனுஷ் தனது பள்ளி நண்பர்களுடன் ரீயூனியனில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

photo

இன்றைய காலகட்டத்தில்  சமூகவலைதளத்தின் வளர்ச்சியால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸஅப் மூலமாக பிரிந்து சென்ற நண்பர்களை கண்டறிந்து நட்பு பாராட்டி வருகிறோம். பலர் அதற்கு ஒருபடி மேலே போய் ரீயூனியன் நடத்தி மகிழ்ந்து வருகின்றனர். தற்போதும் அப்படியான நிகழ்வுதான் நடந்துள்ளது. நடிகர் தனுஷ் சமீபத்தில் தனது பள்ளி நண்பர்களை  அழைத்து ஹோட்டலில் ரீயூனியன் நடத்தியுள்ளார். அப்போது அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தனுஷின் நண்பரான குமரன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  தமிழ் கடந்து இந்தி ,ஆங்கிலம், தெலுங்கு மொழி படங்களில் பிசியாக அடுத்தடுத்து  நடித்துவருகிறார் தனுஷ். தனது பிசியான அட்டவணையில் கூட நண்பர்களுக்காக நேரம் ஒதுக்கியுள்ளது பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Share this story