நடிகர் தனுஷூக்கு இரண்டாவது திருமணமா ?... இணையத்தில் தீயாய் பரவும் தகவல் !

dhanush

நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் தகவல் என்று தீயாய் பரவி இருக்கிறது. 

தமிழ் சினிமாவில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தனுஷ்.‌ 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமான அவர் புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம் என தொடர்ந்து வெற்றி நாயகனாக திரையுலகில் வலம் வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'வாத்தி' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 

dhanush

சினிமா வாழ்க்கையில் கொடிக்கட்டி பறந்து வந்தால், திருமண வாழ்க்கை தனுஷூக்கு சரியாக அமையவில்லை. கடந்த 2004-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பரஸ்பரமாக பிரிந்தனர்.  இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர். 

dhanush

விவாகரத்திற்கு பிறகு இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அவரவர் பணிகளில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். தற்போது போயஸ் கார்டனில் 150 கோடியில் வீடு கட்டிய தனுஷ், பெற்றோருடன் அங்குதான் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. தனுஷின் பெற்றோர் இதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த தகவல் வெறும் வதந்தி என்றும், அதற்கு வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story