நடிகர் தனுஷுக்கு அம்ரித் ரத்னா விருது!
நடிகர் தனுஷுக்கு நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் அம்ரித் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் செம பிசியாக படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் தனுஷ். அதை தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் குபேரா என்ற படத்திலும் நடித்திருக்கிறார் தனுஷ்.
அத்துடன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இன்னும் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார் தனுஷ். இவ்வாறு திரைத்துறையில் தனது அளவில்லாத அர்ப்பணிப்பை கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உறைய வைத்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 2) நியூஸ் 18 இந்தியா தொலைக்காட்சி சார்பில் நடிகர் தனுஷுக்கு அம்ரித் ரத்னா விருது 2024 வழங்கப்பட்டது. இந்த விருதினை விளையாட்டு வீராங்கனை பிடி உஷா தனுஷுக்கு வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.