அண்ணன் செல்வராகவன் பிறந்தநாள்.... குடும்பத்தினருடன் கொண்டாடிய நடிகர் தனுஷ் !

dhanush

தனது புதிய வீட்டில் நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளார் நடிகர் தனுஷ். தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அதன்பிறகு புதுப்பேட்டை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்கள் தனுஷை சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 

தமிழை தவிர தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். 

dhanush

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, 90-களில் பிரபலமான இயக்குனராக இருந்தவர். அம்மா விஜயலட்சுமி இல்லத்தரசி. அண்ணன் செல்வராகவன், பிரபல இயக்குனர் என்பது தெரிந்த விஷயம். இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுப்பாட்டால் இருவரும் பரஸ்பரமாக பிரிந்துவிட்டனர். 

சமீபத்தில் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை நடிகர் தனுஷ் கட்டினார். தற்போது தனது பெற்றோருடன் அங்குதான் வசித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தனது தம்பி புதிதாக கட்டியுள்ள போயஸ் கார்டன் இல்லத்திற்கு இயக்கனர் செல்வராகவன் சென்றார் அங்கு தனது அண்ணணின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் நடிகர் தனுஷ் இன்று கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அண்ணன் செல்வராகவனை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து கொண்டு இருக்கிறார் தனுஷ். இந்த புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story