தனுஷுடன் நடித்த பிரபல நடிகர் மரணம்..

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சினிமா துணை நடிகர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார்.
புது வண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 40) இவர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் சினிமா துணை நடிகராக அறிமுகமாகினார். நடிகர் விஜய் சேதுபதியின் நெருங்கிய நண்பரான இவர், தெறி, மெர்சல், பிகில், புதுப்பேட்டை விக்ரம் வேதா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் ட்விங்கிள் அங்கிலே சூப்பர் ஸ்டார் என்ற வசனம் பேசி ஜெயசீலன் பிரபலமானார்.
கடந்ந சில தினங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயசீலன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசீலன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதனையடுத்து ஜெயசீலன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயசீலன் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் சினிமா வில்லன் நடிகர் சாய் தீனா அஞ்சலி செலுத்தினர்.