சிவகார்த்திகேயன் பட நடிகர் திடீர்‌ மரணம்... மாரடைப்பால் உயிர் பிரிந்தது !

e ramdoss

 பிரபல நடிகரான ஈ ராம்தாஸ் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு மரணமடைந்தார். 

சிவகார்த்திகேயனின் 'காக்கி சட்டை' படத்தின் மூலம் பிரபலமான நடிகராக மாறியவர் ஈ ராம்தாஸ். எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டு திரையுலகில் செயல்பட்டு வந்தவர். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், ராவணன், வாழ்க ஜனநாயகம் ஆகிய நான்கு படங்களை மட்டும் இயக்கியுள்ளார். 

e ramdoss

இதையடுத்து திரைப்படங்களை இயக்காமல் புத்தகம் எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்தார். அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கமலின் 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் யுத்தம் செய், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, குக்கூ, விசாரணை, மெட்ரோ, தர்மதுரை, விக்ரம் வேதா, நாடோடிகள், மாரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈ ராம்தாஸ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்தார். இதையடுத்து கே.கே.நகரில் உள்ள முனுசாமி இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராம்தாஸின் திடீர் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story