‘வாரிசு’ பிறகு வில்லன் அவதாரம் - நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நெகிழ்ச்சி !
‘வாரிசு’ படத்திற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.
‘அபியும் நானும்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கணேஷ் வெங்கராம். அதன்பிறகு ‘உன்னைப்போல் ஒருவன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இயக்குனர் ஜெய் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளார். ஹாரர் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தில் பாவனா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் வெங்கட்ராம் பேசுகையில், ‘வாரிசு’ படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழை தவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளேன். தமிழில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க காத்திருந்தேன். அது வாரிசு படத்தின் மூலம் எனக்கு நிறைவேறியுள்ளது.
‘வாரிசு’ படத்திற்கு பிறகு வித்தியாசமான கதாபாத்திரங்கள் நடிக்க தமிழில் குவிகிறது. அதில் வில்லன் கதாபாத்திரமும் ஒன்று. தற்போது ஜெய் தேவ் இயக்கத்தில் உருவாரும் ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவமாக இருக்கும். அதேபோன்று அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கவுள்ளேன். இது குறித்து புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.