கொரானா காலத்தில் கார், பைக் விற்றேன்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய கெளதம் கார்த்தி !

gautham karthi

நடிகர் கெளதம் கார்த்திக் கூறியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 பிரபல நடிகர் கார்த்தியின் மகனாக கௌதம் கார்த்திக், தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருகிறார். மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

gautham karthi

இதையடுத்து ஆர்யாவுடன் இணைந்து தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 'தேவராட்டம்' படத்தில் நடித்தபோது பிரபல மலையாள நடிகை மஞ்சிமா மோகனுடன் கெளதம் கார்த்திக்கு காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துக்கொண்டார்.   

இந்நிலையில் நடிகர் கெளதம் கார்த்தி கூறியுள்ள தகவல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிறு வயது முதல் யாரிடமும் பணம் கேட்கக்கூடாது என்று வைராக்கியத்துடன் வளர்ந்தேன். எனது திருமணத்திற்கான செலவுகள் அனைத்தும் நானே செய்தேன். கொரோனோ காலக்கட்டத்தில் தனது செலவிற்காக கார், பைக் ஆகியவந்தை விற்றேன். இதுபோன்ற நேரங்களில் மஞ்சிமா மோகன் தான் எனக்கு உறுதி துணையாக இருந்தார் என்று கூறினார். கெளதம் கார்த்திக் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாரா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Share this story