சாட்டை பட நடிகருக்கு திருமணம்

சாட்டை பட நடிகருக்கு திருமணம்

’சாட்டை’ , ‘அடுத்த சாட்டை’ , ‘கமர்கட்டு’, ’கீரிப்புள்ள’, ’இளமி அய்யனார் வீதி’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் யுவன் என்ற அஜ்மல் கான். இவருடைய தந்தை பிரோஸ் கான் ஒரு தொழிலதிபர். இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் . நடிகர் யுவன் என்ற அஜ்மல் கானுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும் நிக்கா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியது. இந்நிகழ்ச்சி விஜிபி ரீசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமான மேடை அமைத்து அதில் திரளான மக்கள் முன்னணியில் நடைபெற்றது .

சாட்டை பட நடிகருக்கு திருமணம்

இந்த திருமண விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் கலந்து மணமக்களை வாழ்த்தினர். 

Share this story