ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்க 40 கோடி சம்பளம் பெற்ற நடிகர் -யார் தெரியுமா ?
பிரபல நிறுவனத்தின் கேம்பா எனர்ஜி, அஜித்குமார் கார் பந்தய அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படுகிறது. இதனால் இதன் கூல்ட்ரிங்க்ஸ் விளம்பரத்தில் அஜித்குமார் நடித்திருந்தார். ஆனால் அஜித்தின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும்பாலும் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக அவரது ரசிகர்களாலேயே ட்ரோல் செய்யப்பட்டார்.
‘எங்க அண்ணனுக்கு ஒன்னுனா, எங்க அண்ணனயே அடிப்போம்’ என பலவாறு ட்ரோல் செய்தனர். இந்நிலையில் ‘இன்டிபெண்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கெட்டுடன் அஜித்குமார் அணி கூட்டணி வைத்துள்ளதாக அக்குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் இந்த பிஸ்கெட்டின் விளம்பர முகமாக அஜித் இடம்பெற்றுள்ளார். இதன் விளம்பரங்களிலும் அவர் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்க அவர் ரூ.40 கோடி சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

