அட்டகாசமான லுக்கில் கவுண்டமணி... புதிய படத்திற்கான கலக்கலான போட்டோஷூட் !

goundamani

புதிய படத்திற்காக நடிகர் கவுண்டமணி வெளியிட்டுள்ள போட்டோஷூட் வரவேற்பை பெற்றுள்ளது. 

goundamani

தனது காமெடி கதாபாத்திரங்கள் மூலம் எளிய மக்களின் அன்பை பெற்றவர் நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாக நடிகராக இருக்கும் அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். நீண்ட நாட்களாக பல நடிகர்கள் அழைத்தும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க மறுத்துவிட்டார். 

goundamani

இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘49 ஓ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற விவசாய படத்தில் நடித்திருந்தார். 

goundamani

இந்நிலையில் மீண்டும் புதிய படம் ஒன்றில் நடிகர் கவுண்டமணி நடித்து வருகிறார். அரசியல் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சசி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் ரவி ராஜன் தயாரிக்கும் இந்த படத்தை சாய் ராஜகோபால் இயக்கி வருகிறார். சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் படத்திற்காக எடுக்கப்பட்ட அட்டகாசமான போட்டோஷூட் ஒன்றை கவுண்டமணி வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

goundamani

 

Share this story