சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து முடித்த ஹரிஷ் கல்யாண்..‌ தலைப்பு குறித்து புதிய அப்டேட் !

harish kalyan

 நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

வளர்ந்து வரும் நடிகராக சினிமாவில் இருப்பவர் ஹரிஷ் கல்யாண். இளம் பெண்களின் கனவு நாயகனாக இருக்கும் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகராக மாறினார். இவர் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட சில ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

harish kalyan

இதையடுத்து அடுத்தடுத்த புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.‌ அந்த வகையில் கிரிக்கெட் வீரர் தோனியின் நிறுவனம் தயாரிக்கும் 'எல்ஜிஎம்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு முன்னர் ஹரிஷ் கல்யாண் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். 'பலூன்' படத்தின் இயக்குனர் சினி ஸ்ரீதரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இயக்கி வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு 'பார்க்கிங்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

 

Share this story