தோனி ஒரு ஆளுமை மட்டுமல்ல.. உணர்வு - நடிகர் ஹரிஷ் கல்யாண்

harish kalyan

 தோனி என்றால் ஆளுமை மட்டுமல்ல, அது ஒரு உணர்வு என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார். 

தோனி மனைவி சாக்ஷி தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் முதன்முறையாக தமிழில் தயாரித்துள்ள திரைப்படம் ‘எல்ஜிஎம்’. இந்த படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

harish kalyan

அந்த வகையில் சென்னையில் ‘எல்ஜிஎம்’ படக்குழுவினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு மக்கள் வரவேற்பு தருவார்களாக என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ‘லவ் டுடே’, ‘டாடா’, ‘குட் நைட்’, ‘போர் தொழில்’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு எனக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது. 

நாம் ஒருவரை ரசிப்போம், அவரை பிடிக்கும், அவருக்கு ரசிகராக இருந்திருப்போம். ஆனால் தோனி என்றால் ஒரு ஆளுமை மட்டுமல்ல. உணர்வு. குறிப்பாக தமிழக ரசிகர்கள் தோனி மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவர். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படத்தில் நான் நடித்துள்ளேன் என்பது எனக்கு கிடைத்த அதிஷ்டம். இந்த வாய்ப்பை கொடுத்த தோனி ரசிகர்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். 

 

 

Share this story