கோலாகலமாக நடைபெற்ற சாக்லேட் பாயின் திருமணம்... நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள் !

harish kalyan

 நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா ஆகியோரது திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. 

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவான ஹரிஷ் கல்யாண், ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படம் போதிய வெற்றியை பெறாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இதில் ஹரிஷ் கல்யாண் ரசிகர்களின் கவனம் பெற்றார். இதையடுத்து பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறினார். 

harish kalyan

இதற்கிடையே நர்மதா என்ற பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹரிஷ் கல்யாண் நாளை தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் நடைபெற்றது. 

இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த பிறகு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story