"என் படத்தின் பாடலை பயன்படுத்திய டூரிஸ்ட் ஃபேமிலி" -பிரபல நடிகர் பேட்டி

சமீபத்தில் வெளியாகிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி "படத்தில் ‘மம்பட்டியான்’ படத்தில் இடம்பெற்ற “மலையூரு நாட்டாம..” என்னும் பாடலை படக் குழுவினர் பயன்படுத்தியது பற்றி நடிகர் தியாகராஜன் பேட்டியளித்தார் .
தியேட்டரில் வெளியாகி வெற்றிபெற்று ,தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஓடிடியிலும் பலர் இந்த படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு காட்சியில் பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘மம்பட்டியான்’ படத்தில் இடம்பெற்ற “மலையூரு நாட்டாம..” என்னும் பாடலை படக் குழுவினர் பயன்படுத்தியிருந்தனர். அந்தப் பாடலுக்கு சசிகுமார் தனது மகன்களுடன் இணைந்து ஆடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதே பாடலுக்கு படக்குழுவினர் அனைவரும் நடனமாடி வைப் செய்து இருந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்டு பேசிய தியாகராஜன் , 'டூரிஸ்ட் பேமிலி' படத்தில் 'மம்பட்டியான்' பட பாடலை பயன்படுத்துவதற்கு அவர்கள் அனுமதி எல்லாம் வாங்கவில்லை. ஆனால் அந்த பாட்டு மீண்டும் மக்களிடம் ஹிட்டாகியுள்ளது. படக்குழுவை நான் வாழ்த்தினேன். அந்த பாடலை அவர்கள் அனுமதி பெறாமலே பயன்படுத்திருக்காங்க அவர்கள் மீது வழக்கு போடுங்க. பணம் கேளுங்க என்று சொன்னாங்க. ஆனா எனக்கு அந்த மாதிரி தோணவே இல்ல. அந்தப் பாடல் மறுபடியும் ஹிட் ஆனதுக்கு நான்தான் காசு கொடு கொடுக்கணும். பல வருடங்கள் கழித்து அந்த பாடல் மீண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது" என்று பெருந்தனமையுடன் கூறினார்
.