100 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் ஜெயம் ரவி... 18 மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படம் !

jayam ravi

 நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஜெயம் ரவி. அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியான ‘ஜெயம்’, ‘எம் குமரன் சன்ஆப் மகாலஷ்மி’, ‘தனி ஒருவன்’, ‘பேராண்மை’, ‘கோமாளி’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

jayam ravi

கடந்த ஆண்டு மணிரத்னத்தின் பிரம்மாண்ட காவிய திரைப்படமாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழி தேவனாக வந்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து சமீபத்தில் வெளியான ‘அகிலன்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இறைவன், சைரன், தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்கள் அவரின் கைவசம் உள்ளது. 

jayam ravi

இந்நிலையில் ஜெயம் ரவியின் 32வது படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. சுமார் 18 மொழிகளில் உருவாகவிருக்கிற இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தில் இது மிகப்பெரிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

 

 

Share this story