நடிகர் ஜெயம் ரவியின் புதிய கெட்டப்.. ஷாக்கான ரசிகர்கள் !

jayam ravi

நடிகர் ஜெயம் ரவியின் புதிய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். 

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. ‘ஜெயம்’ படத்தின் மூலம் ஹீரோவான அவர், அடுத்தடுத்து சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’  திரைப்படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரம் அனைவரிடமும் பாராட்டை பெற்றது. 

jayam ravi

இந்த படத்தையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து இறைவன், சைரன் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களை முடித்து ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். 

jayam ravi

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி கலந்துக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சால்ட் அண்ட் பெப்பர் லக்கில் ஜெயம் ரவி இருக்கிறார். வயதானவரை போன்று இருக்கும் இந்த தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். ஜெயம் ரவி என்றாலே சாக்லேட் பாய் தோற்றம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story