‘ஜெயம் ரவி’ வீட்டு பார்ட்டி – கலக்கும் பிரபலங்கள்!

ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்களுக்கு பார்ட்டிவைத்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயம் ரவி இன்று தனது கடின உழைப்பால முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். ‘ஜெயம்’ படத்தை பார்த்து பலருமே ‘யார் இந்த பையன், பக்கத்துவீட்டு பையன் மாதிரி இருக்கான், நல்லா நடிக்கிறானே!’ என தான் ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே நேர்மறையான விமர்சனத்தை பெற்றார். தொடந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலியான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆர்த்தி சமூகவலைதலத்தில் விதவிதமான உடையணிந்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை சமீத்தில் கொண்டாடியுள்ளார். அதற்காக நைட் பார்ட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு நடிகைகள் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, பிருந்தா மாஸ்டர், துல்கர் சல்மான், அவரது மனைவி மற்றும் நடிகர் வைபவ் என பல பிரபலங்கள் அழைக்கப்பட்டு கோலாகலமாக நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.