’கலகலப்பு 3’ படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் ஜீவா...!

jeeva

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள ’கலகலப்பு 3’  படம் 2026 ஆம் ஆண்டு தொடங்கும் என ஜீவா தெரிவித்துள்ளார். 

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவாவை வைத்து  ’கலகலப்பு 3’  படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்பட பலர் நடித்த ’மதகஜ ராஜா’ என்ற திரைப்படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடந்தது. அதைத்தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. மேலும், 50 கோடிக்கு ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஜீவாவை வைத்து  ’கலகலப்பு 3’  படத்தை இயக்க உள்ளதாக சுந்தர் சி அறிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை படம் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

jeeva

அதில்,  ’மதகஜ ராஜா’ படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்து, அந்த படத்தில் உள்ள ஒரு போர்ஷனை எடுத்து டெவலப் செய்து ’கலகலப்பு 3’ உருவாக்கலாம் என்று சுந்தர் சி முடிவு செய்ததாகவும், அந்த படத்தில் நான் நடிக்கவிருந்த நிலையில், ’மதகஜ ராஜா’ ரிலீஸ் ஆனதால் தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டு ’கலகலப்பு 3’ படத்திற்காக வேறு கதையை சுந்தர் சி தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் அந்த படம் 2026ஆம் ஆண்டு தொடங்கும் என்றும்  ஜீவா தெரிவித்துள்ளார்.  "கண்டிப்பாக ’கலகலப்பு 3’ திரைப்படத்தில் தான் நடிப்பேன். சுந்தர் சி இயக்கத்தில், குஷ்பு அவர்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது என்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்" என்றும் நடிகர் ஜீவா தெரிவித்தார்.

Share this story