மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கும் ஜீவா... வெளியானது புதிய தகவல் !

jeeva
நடிகர் ஜீவா தனது இரண்டாவது பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இளம் நடிகர்களில் ஒருவர் ஜீவா. அவரின் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சக நடிகர்களுடன் எப்போதும் ஜாலியாக இருக்கும் குணம் கொண்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

jeeva

தற்போது அவரின் கைவசம் காபி வித் காதல், வரலாறு முக்கியம், கோல்மால் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் சுந்தர் சி இயகத்தில் உருவான ‘காபி வித் காதல்’ திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. 

தமிழை தவிர ‘83’ என்ற படத்தின் மூலம் இந்தியிலும் நடிகர் ஜீவா அறிமுகமாகியுள்ளார். கடந்த 1983-ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வென்றதை வைத்து இப்படம் உருவானது. இந்த படத்தில் கிருஷ்ணமாச்சாரி காந்த் என்ற கதாபாத்திரத்தில் ஜீவா நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ஜீவா, தனது இரண்டாவது பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் மும்பையில் தொடங்கவுள்ள நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. 

Share this story