'இதனால் தான் நம்ம இன்னும் முன்னேறாமல் இருக்கிறோம்!' – மொழி சர்ச்சை குறித்து பதிலளித்த நடிகர் ஜீவா.

photo

நடிகர் ஜீவா தமிழ் கலை டாட் காம் எனும் செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டார்.  அதில் பேசிய அவர்கலைஞர்களுக்கு சாதி, மதம் இல்லை. ஜிப்ஸி படத்தில் நடித்த போது இந்தியா முழுவதும் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த பயணத்தில் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களையும் சந்தித்தோம். இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் உள்ளது. ஆனால் கலைக்கு மட்டும் மொழிகள் இல்லைஎன கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இன்றைய வேகமான உலகில் இன்று ஒரு படம் எடுத்து நாளை அதை ரிலீஸ் செய்ய முடியும். இம்மாதிரியான உலகத்தில் மறைந்து போன கலைகள் மீண்டும் வருகிறது என்று நினைக்கும் பொழுது மிக சந்தோசமாக இருக்கிறது.  ‘நாங்கள் கைத்தட்டலுக்கு ஏங்குற ஜாதி’ என்பது போன்ற ஒரு வசனத்தை டிஷ்யூம் படத்தில் ஒரு டயலாக் சொல்லியிருப்பேன். அந்த வகையில் இன்று இங்கு இருக்கும் கலைஞர்கள் மிக அற்புதமாக தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அவர்களுக்கு பெரிய கரகோஷத்தை கொடுத்தாக வேண்டும். என ஜிவா பேசினார்.

photo

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜிவா அவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தார் அப்போது 'கலைக்கு மொழி இல்லைனு சொல்றீங்க. ஆனால் தமிழ் கலை டாட் காம் என்று பெயர் வைச்சிருக்கீங்க’ என்று நிரூபர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த ஜீவா ‘ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். கலைக்கு மொழிகள் இல்லை. தாரை தப்பட்டை காஷ்மீரில் இருக்காது. காலநிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். தனுஷ் ஹாலிவுட்டில் நடிப்பது போல . அது மாதிரிதான் இதுவும். இதனை புரிந்துகொள்ளாமல் இருப்பதால் தான் நாம் வளராமல் இருக்கிறோம்’ என நச் பதிகொடுத்து அங்கிருந்து கிளம்பினார்.

photo

Share this story