‘மற்ற கதையில் நான் வில்லன்.. ஆனா இந்த கதையில் நான் ஹீரோ’.. மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகர் !

john kokken

 தனது மகனை பிரபல வில்லன் நடிகரான ஜான் கொக்கன் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜான் கொக்கன். தமிழில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான அவர், பாகுபலி, துணிவு, கப்ஸா, வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 

john kokken

 இதற்கிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபல விஜே பூஜாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தமிழில் பிரபல விஜேவாக இருக்கும் பூஜா, விஜய் டிவி உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர். திருமணத்திற்கு கணவர் ஜான் கொக்கனுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். 

john kokken

கடந்த ஏப்ரல் மாதம் ஜான் - பூஜா தம்பதிக்கு குழந்தை பிறந்தது. இதை சமூக வலைத்தளம் வாயிலாக நடிகர் ஜான் கொக்கன் ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். அந்த குழந்தைக்கு கியான் கொக்கன் பெயர் வைத்தனர். இந்நிலையில் முதல்முறையாக தனது குழந்தையின் முகத்தை வெளியுலகிற்கு காட்டியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள ஜான் கொக்கன், மற்ற எல்லா கதைகளிலும் நான் வில்லன் தான். ஆனால் என் மகனுக்காக இந்த கதையில் தான் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

 

 

Share this story