ப்ளூ சட்டை மாறனுக்கு நடிகர் கலையரசன் கண்டனம்...!
தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் தங்களுக்கென்று youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பணம் சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் என்பவர் மிகவும் பிரபலமான ஒருவர். இவர் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை பார்த்துவிட்டு அப்படத்தின் ரிவ்யூக்களை கொடுத்து வருகிறார். தற்போது அமரன் படத்தை விமர்சிப்பதாக கூறி நடிகர் சிவகார்த்தியேகனின் சொந்த வாழ்க்கை பற்றி பேசியுள்ளார்.
இந்நிலையில் இவரை எதிர்த்து நடிகர் கலையரசன், “ஒரு திரைப்படத்தை விமரசிப்பது, அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை. ஆனால் முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் என்னும் பெயரில் அருவுறுப்பாக பேசுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என்று இவரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.