நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கு டும்.. டும்.. டும்.. முதல் பத்திரிகை யாருக்கு தெரியுமா..?
நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கு திருமண தேதி முடிவாகி திருமணத்திற்கான வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் தேதி மற்றும் இடம் பற்றி விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பத்திரிகை விநியோகம் துவங்கி விட்டதை காளிதாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல் பத்திரிகையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காளிதாஸ் தனது பெற்றோர் ஜெயராம்,பார்வதி உடன் சென்று வழங்கியுள்ளார். அப்போது உடன் துர்கா ஸ்டாலினும் இருந்தார்.
நடிகர் காளிதாஸ், அவருடைய நீண்ட நாள் காதலி தாரிணி காளிங்கராயரை மணமுடிக்கவுள்ளார்.
அவர் ஒரு மாடல் அழகி ஆவார். காளிதாஸ் ஜெயராம் போல் அவருடைய காதலி தாரிணியும் பிரபல மாடல் ஆவார். இவர் 2019ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவர் மற்றும், 2021 ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவர். மாடலாக மட்டும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்தும் பிரபலமானவர் தாரிணி. இவர் தீபிகா படுகோனுடன் இணைந்து விளம்பரங்களிலும் நடித்துள்ளார். காளிதாஸிற்கும், தாரிணிக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. காளிதாஸ் கடைசியாக ராயன் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.