NAB Show 2025-ல் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் லாஸ் வேகஸில் நடந்த NAB Show 2025-ல் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் தற்பொழுது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லாஸ் வேகாசில் நடந்த NAB Show இல் கலந்துக் கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.NAB Show என்பது வருடத்திற்கு ஒருமுறை லாஸ் வேகாசில் 1991 ஆம் ஆண்டில் இருந்து நடைப்பெற்று வருகிறது. இதில் கலைத்துறை மற்றும் கலைத்துறையில் வளர்ந்து இருக்கும் தொழில்நுட்பங்கள் என பல விஷயங்களை பற்றி அங்கு தெரிந்துக் கொள்ளலாம். அடுத்து கலைத்துறையில் ஏ.ஐ தொழில் நுட்பங்கள் எவ்வாறு செயல்படவுள்ளது. அதைப்பற்றி இந்தாண்டு நிகழ்ச்சியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது./
The brightest minds of the creator economy in Media, Entertainment, AI, Sports, and Technology are converging at the #NABShow2025 in Las Vegas.
— Raaj Kamal Films International (@RKFI) April 7, 2025
And leading the way — the OG disruptor, @ikamalhaasan — a visionary who shaped the future long before others imagined it.#NABShow2025… pic.twitter.com/WhqGEyRD7a