"எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக"... வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன் !

kamal

 64 ஆண்டுகள் சினிமா நிறைவுக்கு வாழ்த்து சொன்னவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சினிமா மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் பல புரட்சிகளை செய்து தற்போதைய சினிமாவை பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்முன்னே காட்டியவர். 

kamal

இன்றைக்கும் இளமை துடிப்புடன் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மரண மாஸ் ஹிட்டடித்தது.  ‌இதற்கிடையே சினிமா உலகிற்கு வந்து இன்றுடன் 63 ஆண்டுகளை நடிகர் கமல்ஹாசன் நிறைவு செய்துள்ளார். 64 ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உலக நாயகன் கமலஹாசனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக என்று கூறியுள்ளார். 

 


 


 

Share this story