சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் இயக்குநர்.... எச் வினோத்திற்கு கமல் பிறந்தாள் வாழ்த்து

சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் இயக்குநர்.... எச் வினோத்திற்கு கமல் பிறந்தாள் வாழ்த்து


இயக்குநர் எச்.வினோத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக வலம் வரும் எச்.வினோத் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து இவர் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து அவரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக மாற்றியது. அடுத்து, அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தார் எச்.வினோத். இதில், 'துணிவு' திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது. அண்மையில், கமல்ஹாசனின் 233-வது படத்தை எச்.வினோத் இயக்குவதாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. 

சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் இயக்குநர்.... எச் வினோத்திற்கு கமல் பிறந்தாள் வாழ்த்து

இந்நிலையில், இன்று பிறந்தாள் கொண்டாடும் இயக்குநர் எச்.வினோத்திற்கு நடிகர் கமல்ஹாசன், வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி எச்.வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.  

Share this story