இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளராக நடிகர் கமல் தேர்வு.. விருதை வழங்கி கவுரவிக்கிறது ஐஐஎஃப்ஏ

kamal

 இந்திய சினிமாவின் சிறந்த வாழ்நாள் சாதனையாளராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கமலஹாசன். குழந்தை  நட்சத்திரமாக அறிமுகமான அவர் தற்போது வரை அதே துடிப்புடன் நடித்து வருகிறார். இந்தியா வியந்து பார்க்கும் அளவிற்கு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். 

தான் இயக்கி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுபுது தொழில்நுட்பங்களை புகுந்து அனைவரையும் வியக்க வைத்தவர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். 

தனது சாதனைகளுக்காக பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகராக இருக்கும் நடிகர் கமலஹாசனுக்கு இந்திய சினிமாவின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. 2023-ஆம் ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட விழா வரும் மே 27-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இந்திய சினிமாவில் சிறந்த பங்காற்றியதற்காக கமலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. வாழ்நாள் விருது பெறும் கமலஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

 

Share this story