“இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர்” - எஸ்பிபி பிறந்தநாளில் கமலஹாசன் உருக்கம் !

kamal with spb

மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அரை நூற்றாண்டுகளாக தமிழ் ரசிகர்களின் மனங்களை தன் இசையால் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.   அழகிய குரலுக்கு சொந்தக்காரரான இவர், காதல், சோகம், நட்பு, கொண்டாட்டம் என அனைத்து உணர்வுகளுக்கும் பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 6 மொழிகளில் காலத்தால் அழிக்க முடியாத ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

kamal with spb

  பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்ட அவர்,  கடந்த 2020-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் பிறந்தநாளை பிரபலங்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து.

Share this story