இயக்குனர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன உலகநாயகன்...

shankar

இயக்குனர் ஷங்கர் பிறந்தநாளையொட்டி நடிகர் கமலஹாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

shankar

முன்னணி இயக்குனர் ஷங்கர், ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.  ஜீன்ஸ், அந்நியன், இந்தியன், நண்பன், எந்திரன், முதல்வன், 2.O என தொடர்ந்து பல படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். பிரம்மாண்டங்களுக்கு பெயர் போன அவரது திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

shankar

60 வயதாகும் இயக்குனர் ஷங்கர், தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி  திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘இந்தியன் 2’ படக்குழுவினர் இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

shankar 

ஷங்கரின் பிறந்தநாளையொட்டி உலகநாயகன் கமலஹாசனும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story