சினிமாவில் கமலுக்கு வயது 64... பிரபலங்கள் வாழ்த்து !

kamal

நடிகர் கமலஹாசனின் 64 ஆண்டு சினிமா நிறைவையொட்டி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். முதல் படத்திலேயே குடியரசு தலைவர் விருதை பெற்ற அவர்,  இந்தியாவே போற்றும் நடிகராக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 6 மொழிகளில் 232 திரைப்படங்கள் நடித்துள்ளார். 

குருதிபுனல், ஆளவந்தான், விஸ்பரூபம், இந்தியன் உள்ளிட்ட பல மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். பத்மபூஷன், 4 முறை விருதுகள், பல முறை மாநில விருதுகள் என பல விருதுகளை பெற்று சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அனைவரையும் மெய்சிலிர்க்க  வைத்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் சினிமா உலகிற்கு வந்து இன்றுடன் 63 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 64 ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உலக நாயகன் கமலஹாசனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Share this story