மாஸ் காட்டும் கமல்ஹாசன்... அமெரிக்காவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு !

project k

அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

project k

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பிராஜெக்ட் கே'. இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அறிவியல் புனைக்கதை வைத்து உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

project k

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர்  அமெரிக்காவின் சான் டியாகா காமின் கான் நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. இதன் முலம் உலக அளவில் பிரபலமான சான் டியாகோ காமிக் கான் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பிராஜெக்ட் கே பெறுகிறது. 'பிராஜெக்ட் கே' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

project k

இந்த நிகழ்வில் பங்கேற்காக நடிகர்கள் பிரபாஸ், ராணா, உலகநாயகன் கமலஹாசன் உள்ளிட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனை பார்க்க ரசிகர்கள் குவிந்துள்ளனர். கமல்ஹாசனை பார்த்ததும் மகிழ்ச்சியில் உற்சாகமாகும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

Share this story