பிரபல நடிகரின் ஃபேஸ்புக் பக்கம் திடீரென முடக்கம்.. மர்ம நபர்கள் அட்டகாசம் !

karthi

தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் நடிகர் கார்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். 

சமூக வலைத்தளங்கள் பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்து வருகிறது. அதனால் நடிகர், நடிகைகள் தாங்கள் சொல்ல நினைக்கும் விஷயங்களை சமூக வலைத்தளங்கள் மூலமே பகிர்ந்து வருகின்றனர். அப்படி பிரபலங்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் மர்ம நபர்கள் ஊடுவி தங்களது சித்து விளையாட்டை காட்டி வருகின்றனர். 

karthi

அந்த வகையில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அவரது பக்கத்தை ஹேக் செய்துள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதனால் பேஸ்புக் குழுவுடன் பேசி பிரச்சனையை சரி செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார். கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கிறார் நடிகர் கார்த்தி. சமீபகாலமாக விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார். தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

Share this story