நடிகர் கார்த்தி பிறந்தநாள்... சிறப்பு போஸ்டருடன் வாழ்த்து தெரிவித்த சர்தார் 2 படக்குழு...!

நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சர்தார் 2 படக்குழுவினர் சிறப்பு போஸ்டருடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’சர்தார். இதை தொடர்ந்து சர்தார் 2 பாகம் உருவாகி வருகிறது.
சர்தார் 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
We at @Prince_Pictures wish the stellar actor and our dearest @Karthi_Offl sir a very happy birthday.#Sardar2@ivyofficial2023 @Psmithran @iam_SJSuryah @lakku76 @venkatavmedia @RajaS_official @B4UMotionPics @MalavikaM_ @AshikaRanganath @rajishavijayan @iYogiBabu @SamCSmusic… pic.twitter.com/AfT5nabrG7
— Prince Pictures (@Prince_Pictures) May 25, 2025
சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. எஸ்.ஜே சூர்யா பிளாக் டாகர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கார்த்தி-க்கு வாழ்த்து தெரிவித்து சர்தார் 2 படக்குழு புது போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.