'சர்தார் 2' படப்பிடிப்பின்போது நடிகர் கார்த்தி காயம்! படப்பிடிப்பு ரத்து

சர்தார்-2 படப்பிடிப்பு தளத்தில் சண்டைக் காட்சியை படமாக்கும்போது நடிகர் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மைசூர் சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், நடிகர் கார்த்திக்கு ஏற்பட்ட காயம் காரணமாக படக்குழு படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி சென்னை திரும்பியது. பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணியில் சர்தார்-2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இதன் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. மார்ச் மாதத்திற்குள்ளாக இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய திட்டமிட்டப்பட குழு அதன் ஒரு பகுதியாக சண்டைக் காட்சியை படமாக்க கடந்த சில நாட்களுக்கு முன்பாக படக்குழு மைசூர் சென்றது. தத்ருபமான சண்டைக் காட்சிகளை படமாக்க ஆவேசம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் சேத்தன் டிசோசா இதன் சண்டைக் காட்சிகளை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மைசூரில் நடைபெற்று வந்த சண்டைக் காட்சிகள் படப்பிடிப்பின் போது நடிகர் கார்த்திக்கு எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்ற கார்த்தி ஒரு வார காலம் இல்லத்தில் தங்கி ஓய்வெடுக்கும்படி மருத்துவர்களால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது இதனால் படப்பிடிப்பை பாதியில் ரத்து செய்து மைசூர் சென்ற படக்குழு சென்னை திரும்பி உள்ளது.