‘சூது கவ்வும்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி... புதிய படத்தின் மாஸ் அப்டேட்

karthi

கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஜப்பான்’. ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. 

karthi

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. 

அதன்படி சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story